தமிழ்ச் சமூக வரலாற்றில் மணிமேகலை


Author: ந. மனோகரன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 360.00

Description

பௌத்த சமயம் உலகப் பண்பாடுகள் பலவற்றாலும் உள்வாங்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. சமயம் எனும் வரம்பினைக் கடந்து வாழ்வியல் நெறி என்ற நிலையில் பௌத்தத்தின் பல கூறுகள் உலக மக்கள் பண்பாட்டுக்குள் ஊடுருவிச் சென்று செழுமைப்படுத்தியுள்ளன. பௌத்த சமயம் தமிழ்ச் சமூகத்தில் அழித்தொழிந்த பின்னும் கூட சமயமில்லாச் சமூகத்தில் வாழ்ந்து வரும் ஒரு தனிச் சமய நூலாக விளங்குகிறது மணிமேகலைக் காப்பியம் என்பார் பவுலா ரிச்மேன். 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் அயோத்திதாச பண்டிதர் போன்றோரின் பௌத்த மீட்பியக்கப் பணிகள், சிந்தனைகளால் தமிழ்ச் சமூகத்தில் மணிமேகலைக் காப்பியம் சமகால ஏற்பமைவை நோக்கி நகர்ந்து தமிழ் பௌத்தம் என்னும் உரையாடலைக் கட்டமைப்பதற்கான அடிப்படையைத் தொடங்கி வைக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் சமூக அரசியல் பண்பாட்டுக் கருத்தியல் தளங்களில் மணிமேகலை வாசிக்கப்பட்டுள்ளது. மணிமேகலைக் காப்பியம் சார்ந்த இந்நிகழ்வுகள் அனைத்தையும் தொகுத்துக்கொண்டு மணிமேகலைக் காப்பியம் தமிழ்ச் சமூக வரலாற்றின் அசைவியக்கத்தில் செலுத்தியுள்ள பங்களிப்பை எடுத்துரைக்கின்றது.

You may also like

Recently viewed