Author: சோம.வள்ளியப்பன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 175.00

Description

ஓர் இலக்கை எப்படி வகுத்துக்கொள்வது? வகுத்துக்கொண்ட இலக்கை எப்படி அடைவது? இந்த இரண்டையும் விரிவாகவும் பிரமிக்க வைக்கும் எடுத்துக்காட்டுகளோடும் விவரிக்கிறது இந்நூல். சில இலக்குகளைக் குறுகிய காலத்துக்குள் அடைந்துவிடலாம். ஆனால் சிலவற்றுக்கு வாழ்நாள் முழுக்கப் பயணிக்கவேண்டியிருக்கும். அதை எப்படிச் செய்யப்போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. கடும் இடர்பாடுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கும். என்ன நடந்தாலும் சரி, பின் வாங்கமாட்டேன். எடுத்துக்கொண்டதைச் செய்து முடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முன்னேறினால் மட்டுமே இலக்கு சாத்தியப்படும். அப்படிப்பட்ட மூன்று மிகச் சிறந்த வெற்றிகளை, 3 வரலாற்று நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார் மேனேஜ்மெண்ட் குரு சோம. வள்ளியப்பன். அண்டார்டிகாவை ஆய்வு செய்யச் சென்றவர் தன்னோடு வந்தவர்களின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார்? தாய்லாந்து குகையில் மாட்டிக்கொண்ட 12 சிறுவர்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? உணவு, உடை, அடையாளம் எல்லாவற்றையும் இழந்து நாஜி முகாமில் சிக்கிக்கொண்ட ஒரு மருத்துவர் எவ்வாறு அந்தத் துயரைக் கடந்தார்? நம் வாழ்வையும் சிந்தனையையும் மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டிருக்கும் நூல் இது.

You may also like

Recently viewed