தமிழில் தலித்தியம்

Save 10%

Author: சுப்பிரமணி இரமேஷ்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 235.00 Regular priceRs. 260.00

Description

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள், சாதியை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றிய வைதீக மரபின் நால்வருணப் பண்பாட்டுக்கு எதிரான கலக மரபுகளை முன்னெடுக்கத் தொடங்கினர். இத்தன்மை இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. நவீன பௌத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவை ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காகப் போராடத் தொடங்கின. ஜோதிராவ் புலே, அயோத்திதாசர், பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஆகிய ஆளுமைகள் சார்ந்த மரபு தலித்தியக் கருத்துநிலையை முன்னெடுத்த முன்னோடி மரபாக உருப்பெற்றது. மேற்குறித்த சமூக நிகழ்வுகளில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால முன்னெடுப்பே தலித்தியம். நவீன அரசியல் கருத்துநிலைகளை உள்வாங்கி இன்றைய தலித்தியம் செயல்படுகிறது. இதனைக் குறித்த பதிவாகவே  சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள இந்த நூல் அமைகிறது. பின்காலனிய நவீன சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஆவணமாகவும் இந்நூல் இருக்கும். - பேரா. வீ. அரசு

You may also like

Recently viewed