உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்


Author: தமிழில் இஸ்க்ரா

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 285.00

Description

இலக்கியம், அறிவியல், சமூகம், வரலாறு என்று பல துறைகளில் நீடித்த தாக்கத்தைச் செலுத்திவரும்  முக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள்.

ஒரு கட்டுரை உங்களைத் திகைக்க வைக்கும் என்றால் இன்னொன்று அதிர வைக்கும். சில பக்கங்களை நகைத்துக்கொண்டும் வேறு சிலவற்றை ஆழ்ந்து யோசித்துக்கொண்டும் படிக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில், அறிவுத் தேடல் கொண்ட அனைவரையும் செழுமைப்படுத்தும் நூல் இது.

ஜார்ஜ் ஆர்வெல், வர்ஜீனியா உல்ஃப், மார்க் ட்வைன், மால்கம் எக்ஸ், ஐன்ஸ்டைன், பிரான்சிஸ் பேக்கன், ஆல்பர்ட் காம்யூ, மாக்சிம் கார்க்கி உள்ளிட்டவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் இதில் அடங்கியுள்ளன.அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் உலக அரசியலிலும் வித்தகராக இருந்திருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்குத் தூக்கிவாரிப் போடும் ஒரு யோசனையை முன்வைக்கிறார் ஜோனத்தன் ஸ்விஃப்ட். காதல் ஏன் தனக்குப் பிடிக்காது என்பதை விவரிக்கிறார் தத்துவ அறிஞர் பிரான்சிஸ் பேக்கன். வறுத்த பன்றி குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்கிறார் சார்ல்ஸ் லேம்ப். 

பெண் கல்வி, பழங்குடியினர் உரிமை, அறிவியல், அரசியல், புத்தக வாசிப்பு, தத்துவம், உணவு எனப் பல்சுவை எழுத்துகளைச் சுவையான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா. குறிப்பாக மாணவர்கள் இதிலிருந்து நிறைய பயன்பெறமுடியும்.

You may also like

Recently viewed