தமிழில்-முல்லை பிஎல்.முத்தையா

உலகப் புகழ்பெற்ற நாவல்கள்

முல்லை பதிப்பகம்

 700.00

SKU: 1000000031913_ Categories: ,
Author

Pages

736

format

Imprint

மாக்ஸிம் கார்க்கியின் “அம்மா’, லியோ டால்ஸ் டாயின் “அன்னா கரினினா’, டாஸ்டாவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “வாடாமல்லிகை’ என்ற தலைப்பில் அலெக்ஸாண்டர் டூமாஸ் ஜூனியரின் “கேமிலி’, எமிலி ஜோலாவின் “நாநா’, “ஐந்து சகோதரிகள்’ என்ற பெயரில் ஜேன் ஆஸ்டினுடைய “பிரைட் அன்ட் பிரிஜுடீஸ்’ நாவல்களைத் தமிழில் தந்திருக்கிறார் பிஎல். முத்தையா.
1905-இல் ரஷியாவில் நிகழ்ந்த விவசாயிகள் புரட்சியின் தோல்விக்குப் பிறகு, மக்களின் மத்தியில் நம்பிக்கை ஊட்டுவதற்காக, புரட்சிக்கானஉந்துசக்தி நீர்த்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கார்க்கி எழுதிய நாவல்தான் “அம்மா’.
பெரு நாவல்களான “அன்னா கரினினா’வையும் குற்றமும் தண்டனையையும் கட்டுக்குலையாமல் சுருக்கியிருக்கிறார் முத்தையா. மணமான ஒரு பெண்,மற்றோர் ஆணிடம் கொண்ட முறையற்ற காதல், அதன் தொடர் விளைவுகள் எனச் செல்லும் நாவலில் தடம் பிறழ்ந்த பெண்ணான அன்னாவுக்காக இன்றும் வாசகர்கள் உருகுவதுதான் டால்ஸ்டாயின் வெற்றி.ரோடி என்ற இளைஞன் செய்யும் இரு கொலை, கொள்ளையும் அதையொட்டிய அவனுடைய மன அவதியும் சரணாகதியுமே “குற்றமும் தண்டனையும்’.
பேரழகியான விலைமாது மார்க்கரெட்டின் புனிதமான காதல் கதைதான் “வாடாமல்லிகை’.
எமிலி ஜோலாவின் 20 நாவல்களின் தொகுதியில் ஒன்று “நாநா’. பாரிஸ் நகரச் சேரிப்புறத்தில் பிறந்து மேல்தட்டு விலைமாதாக மாறிப் பல பணக்கார ஆண்களின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கி மறையும் ஒரு பெண்ணின் கதை.
சாதாரண நடுத்தரக் குடும்பப் பெண்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, பணக்காரக் குடும்பத்துடனான ஒப்பீடுகளுடன்வாழ்க்கையின் விழுமியங்களைச் சொல்லும் குடும்பக் கதை “ஐந்து சகோதரிகள்’, ஆங்கில நாவல். 1950-களில் வெளிவந்த இவை அனைத்தும் இப்போது மீள் உருக்கொண்டிருக்கின்றன.
சுருக்கப்பட்டதெனத் தெரியாத அளவுக்கும், மொழிபெயர்ப்பு என்று உணர முடியாத அளவுக்கும், தமிழில் தந்திருக்கும் பிஎல்.முத்தையாவின் அன்றைய முயற்சி பாராட்டுக்குரியது.