மீரா

கீரனூர் – ஒரு காலப்பயணம்

அணுகல் பதிப்பகம்

 100.00

SKU: 1000000033085_ Category:
Author

Pages

114

format

Year Published

2022

Imprint

மீரா அவர்களின் ஆய்வு, கீரனூர் திரு. வாகீசுவரமுடையார் கோவிலின் 22 கல்வெட்டுகளை முதன்மைச் சான்றாகக் கொண்டிருக்கிறது. கி.பி. 1135 – 1255 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக் கீரனூரை மீரா அகழ்ந்தெடுத்திருக்கிறார். அக்காலத்துக்கு முன்னும் பின்னுமான காலத்தை நாம் சென்றடைவதற்கான வழிகளையும் அவர் திறந்துவிடுகிறார். தனிப்பட்ட கீரனூரின் வரலாறு, கொங்கு நாட்டின் வரலாறாகவும் விரிகிறது. பொங்கலூர்க்கா நாட்டைச் சேர்ந்த ‘கொழுமம் கொண்ட சோழநல்லூர்’ என்றழைக்கப்பட்ட கீரனூரின் அக்காலத்தைய வரலாறு இதில் பதிவாகியுள்ளது. தொல்லியல்துறை , அரசு ஆவணங்கள், பல நூல்கள், நேர்காணல்கள் என்று கண்டு கடுமையான உழைப்பை அவர் இந்த ஆய்வுக்குச் செலுத்தியுள்ளார். முக்கியமாக மீரா இப்பிரதியை நவீனத் தமிழில் வாசிப்பதற்கேற்ற நடையில் கையாண்டிருக்கிறார். 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1993 – 1996) ‘பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு’ச் சமர்ப்பித்த ஆய்வறிக்கை, இன்று கீரனூரின் நூற்றாண்டுகளின் வரலாறு கூறும் ஒரு அரிய நூலாக நமக்குக் கிடைத்துள்ளது.