எஸ்.பிரபுராஜ்ஜே.சி.டேனியல் (திரையில் கரைந்த கனவு )
சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்₹ 100.00
கன்னியாகுமரி தமிழரான ஜே.சி.டேனியல் கேரள மண்ணில் முதல் சினிமாவை உருவாக்கியவர் என்ற முறையில் மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிறார்.சினிமா தயாரிப்பதற்காக டேனியல் அனுபவித்த சிரமங்களும்,கதாநாயகியாக நடித்த பெண்ணிற்கு நேர்ந்த அவலங்களும்,டேனியலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சிகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.ஆரம்ப கால மலையாள சினிமாவின் வரலாறு குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே.