Description
இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதனால் இறுதி வரை விமரிசனம் எழுதமாட்டேன்' என்று சொல்லும் பா. ராகவன், தனக்குப் பிடித்த சில நாவல்களையும் அவற்றின் பின்னணியையும் இந்தப் புத்தகத்தில் ரசனையுடன் விவரிக்கிறார்.
கல்கியில் தொடராக வெளியான 'பின் கதைச் சுருக்கம்', வெளியானபோதே ஏராளமான வாசக வரவேற்பைப் பெற்று, புத்தகமானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இது மறு பிரசுரம் காண்கிறது.