விடுபட்டவர்கள் - இவர்களும் குழந்தைகள்தான்


Author: இனியன்

Pages: 100

Year: 2021

Price:
Sale priceRs. 100.00

Description

பெருமழைக்காலத்தில் குழந்தைகளின் உளவியலும் அச்சமும் எப்படி இருந்தன என்பதை சிறுவர்களைச் சந்தித்தபின் என்னுடன் உரையாடியபோது பகிர்ந்துகொண்டான். வேலையைத் துறந்து, சுயநலத்துக்கான சட்டையை உதிர்த்து விட்டு குழந்தைகளுக்காக முழுநேரமும் செயல்பட இருப்பதாக என்னிடம் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக வரவேற்றேன். அதன்பின் பல்வேறு மாவட்டங்களில் பல அரசுப் பள்ளிக் குழந்தைகளோடு தன்னைப் பிணைத்துக் குழந்தைகள் தங்கள் சிறகுகளுக்கு வண்ணம் தீட்ட தன்னால் முடிந்த உதவிகளை செய்வதில் ஆனந்தம் கொள்பவன். தன்னை மாமா, அப்பா, தாத்தா, அண்ணன் எனக் குழந்தைகள் அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறான்.இனியனின் தொடர் ஓட்டத்தில் கிடைத்த அனுபவங்களின் பகிர்வாக “விடுபட்டவர்கள் – இவர்களும் குழந்தைகள் தான்” என்னும் தலைப்பில் பல்வேறு விசயங்களைப் பகிர்ந்திருக்கிறான்.குழந்தைகளுக்கான தேவைகள் குறித்தும் கவனிக்க வேண்டியவை குறித்தும் புரிந்துகொள்ள இந்நூல் மிகவும் பயன்படும். மாணவர்கள் உலகில் நுழைந்து நுட்பமான விஷயங்களை வாசகர்கள் அறிந்து கொள்ள உதவும்.குழந்தைகள் உலகில் இனியன் மேற்கொண்டிருக்கின்ற பயணத்தின் சாட்சிகளும் மனசாட்சிகளுமாக உழல்கிற நூல் இது. தம்பி இனியனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.

You may also like

Recently viewed