A.Ramasami

ஒளிநிழல் உலகம் (தமிழ் சினிமா கட்டுரைகள்)

காலச்சுவடு

 80.00

In stock

SKU: 1000000000664_ Category:
Title(Eng)

Olin-Izal Ulakam (Thamiz Sinima Kadduraikal)

Author

Format

Paperback

Imprint

தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வருமளவுக்கு அவைபற்றிய ஆய்வுகளோ கட்டுரைகளோ வெளியாவதில்லை. தமிழர் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் சினிமாவை விமர்சனமின்றிக் கொண்டாடும் ரசிக மனோபாவம் ஒருபுறம். அது கீழ்மக்கள் கலை என்கிற மேட்டிமை வாதம் மறுபுறம் சினிமா குறித்த அணுகுமுறை இப்படித்தான் உள்ளது. சினிமாவை ஒரு அச்சுப் பிரதிபோல பாவித்துப் பலரும் எழுதி வருகிற சூழலில், சினிமாவின் பிரத்யேகமான மொழியைப் புரிந்துகொண்டு பேசுகின்றன இந்தக் கட்டுரைகள். சினிமாவின் அரசியலைப் பேசுவதனூடாக அரசியல் சினிமாவின் தேவையை நமக்கு உணர்த்தும் இந்த நூல், சினிமாவின் கேளிக்கை அம்சத்தைக் குலைக்காமல் அதன் கருத்தியலைத் திறந்து காட்டுகிறது.