கமலாம்பாள் சரித்திரம்


Author:

Pages: 296

Year: 2011

Price:
Sale priceRs. 175.00

Description

அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த தமிழக கிராமத்தின் வாழ்வைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும் தமிழ் வசன நூல் இதைத் தவிர வேறொன்றும் கிடையாதென்றே சொல்லலாம். அது மட்டுமின்றி, ராஜமய்யர் எள்ளி நகையாடி ஏளனம் செய்த எத்தனையோ அம்சங்கள் இன்று கூட ஜீவனுடன் இருந்து வருகின்றன.ஸ்ரீ ராஜமய்யர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார் என்று பாரதி சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.புதிய தமிழ் இலக்கியத்தின் மூன்று தூண்கள் ராஜம் ஐயர், பாரதி, புதுமைப்பித்தன்.----------தமிழில் முதல் நாவல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். இது 1876ஆம் ஆண்டு வெளிவந்தது.தமிழில் ஐந்தாவது நாவல் என்று கருதப்படுவது பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் (1896). இது விவேகசிந்தாமணி என்ற பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது.பாத்திரப்படைப்பு, நடை, சம்பவங்கள் எல்லாவற்றிலும் கலை நுட்பம் மிக்கது இந்த நாவல். யதார்த்த நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டது. எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதால், தமிழின் முதல் சிறந்த நாவல் என்று பல விமர்சகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.நீண்ட இடைவெளிக்குப்பிறகு, நவீன வடிவமைப்பால் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.நன்றி: தினத்தந்தி, 8/2/2012.

You may also like

Recently viewed