மெர்க்குரி பூக்கள்

திருமகள் நிலையம்

 180.00

In stock

SKU: 1000000002089_ Category:
Title(Eng)

Mercurie Pookal

Imprint

மெர்க்குரிப் பூக்கள் நாவல் பற்றிச் சில அபிப்பிராயங்கள்மனுஷனாயா, நீ. பிரம்பராட்சஸன், சித்து வேலைக்காரன். ஒவ்வொரு இதழிலும் இப்படிப் பயத்தையும் வேதனையையும் பாரத்தையும் ஏற்றி வைத்து விட்டு முற்றும்னு எப்படிப் போட முடிஞ்சது உன்னால்…பாலகுமாரன், சுற்றும்புறம் மறந்து, எடுத்த வேலைகள் மறந்து, மறுபடி மறுபடி உங்கள் எழுத்துகளையே பைத்தியம் மாதிரி படித்துக் கொண்டிருக்கிறேன் என் ஆசானே, உனக்கு என் நமஸ்காரம். சகல வல்லமைகளும் உனக்கு வரட்டும் என்று சத்தியமாய், வெகு சத்தியமாய் இந்த நேரம் பிரார்த்திக்கிறேன்.- கணபதி ராமன், நெல்லை – 2.உங்களை ஒன்று கேட்கலாமா? மெர்க்குரிப் பூக்களை சினிமாவா எடுக்க சம்மதிச்சுட்டீங்களா, இதைப் பேப்பரில் படிச்சேன், என்னால் பொறுக்கவே முடியலை. அன்னி பூரா இன்டஸ்ட்ரியில் எடுக்க யார் ஆள்? ஒரு ஆள் சொல்லுங்கள். கணேசனை சாவித்திரியை யார் புரிஞ்சுக்க முடியும்? சியாமளியை, சங்கரை யார் உருவம் கெடாம எடுக்க முடியும்? கோபாலனை, அவன் புரட்சியை எவர் படமாக்க முடியும்? பாலா, நீங்கள் பெரிய முட்டாள்.- ரேணுகா, திருத்துரைப்பூண்டி.மெர்க்குரிப் பூக்கள் ஒரு நல்ல நாவல், அரற்றல் சற்று அதிகமிருந்தாலும், தெளிவுபடுத்த வேண்டும் என்கிற எண்ணமும் தேடல் பற்றிய பிரக்ஞை முழுவதும் விரவியிருந்ததை மறுப்பதற்கில்லை. ஒரு வாரப் பத்திரிகையில் இந்த நாவல் வெளியானது அதிசயம் தான். உங்களைப் பின்பற்றி நிறையப் பேர் எழுதத் துவங்குவார்கள். எனவே அடுத்த நாவலிலேயெ நீங்கள் நடையை மாற்றிக் கொள்ள வேண்டும்.- எஸ்.சுதாகரன், பி.எஸ்.சி – பெங்களூர்.நீங்கள் ஒரு மார்க்ஸிஸ்டா. ஆமெனில் உடனே பிரகடனப்படுத்துங்கள். இல்லையெனில் சும்மா இருங்கள். மார்க்ஸை முறையாக அறியாதவர் அதுபற்றிப் பேசுவது தவறு. அது மிகப்பெரிய இடையூறு, ஊசலாட்டக்காரராய், திரிபுவாதியாய் உங்கள் எழுத்து உங்களை இனம் காட்டுகிறது. வியாபாரத்துக்கு மட்டும் மார்க்ஸைப் பயன்படுத்துவது அயோக்கியத்தனம்.- கதிரேசன், திருத்துறைப்பூண்டி.வாரப்பத்திரிகை இலக்கியம் வளர்க்காது என்பது இருபது ஆண்டுகளுக்கு முன்பே, அடிபட்டுப் போயிற்று. திருவாளர்கள் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், இந்திரா பார்த்தசாரதியையும், சுஜாதாவையும், ஜெயந்தனையும் அப்பெரும் கப்பல்கள் சுமந்து வந்திருக்கின்றன. விரைவாய் இலக்கியம் பரப்பியிருக்கின்றன. இன்னாரால் இன்னவிதமாய் வளர்விப்பதே இலக்கியம் என்பது சரியான வாதமில்லை. காலம் தட்டிக் கேட்கப் பத்திரிகைகள் மட்டுமில்லை. அதைக் காட்டிலும் பெரிய மீடியமான சினிமாவும் இலக்கியம் வளர்க்க வேண்டிவரும்.அப்படி மாறிய காலத்தில் ஆரம்பத்தைக் காட்டுகிறது மேலே கொடுக்கப்பட்ட கடிதங்கள்.இந்நாவலை இலக்கியம் என நான் கொண்டாட முற்படுவதாய் நினைக்க வேண்டாம். அதைக் காலம் தீர்மானிக்கும். இந்நாவல் வாரப் பத்திரிகையில் வெளி வந்ததாலேயே உண்டான துவேஷத்தைத் தணிக்க முயல்கிறேன்.- பாலகுமாரன்