Title(Eng) | Venkatam Muthal Kumari Varai 4 Parts |
---|---|
Author | |
Pages | 1416 |
Year Published | 2011 |
Format | Paperback |
Imprint |
வேங்கடம் முதல் குமரி வரை 4 பாகங்கள்
பூவிழி பதிப்பகம்₹ 0.00
Out of stock
பாகம் 1 முதல் 3 வரை – வேங்கடம் முதல் குமரி வரைபாகம் 4 – வேங்கடத்துக்கு அப்பால்தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் முதுகலை இலக்கியம் படித்தவர். தமிழையும். தமிழ் மொழியின் வளர்ச்சி ஆளுமையையும் அவரது இலக்கிய எழுத்துக்கள் வரலாற்று கல்வெட்டுக்களாக இந்த நூல்களின் வாயிலாக அலங்கரித்து வருகின்றன.இவரது ஆலய தரிசன-ஆன்மீகப் பயணக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் வாசிப்பவர்களுக்கு ஒரு தெளிந்த நீரோடையாக காட்சிகளை கண்முன்னே கொண்ட வந்து நிறுத்திவிடுகிற அளவிற்கு எளிமையான நடையில் கையாளப்பட்டுள்ளது. இருபதாண்டு காலம் நேரிற் சென்று அனைத்து விபரங்களையும் அனுபவங்களையும் கூறும் ஆசிரியரின் பணி பாராட்டத்தக்கது.நமது பாட்டன் – முப்பாட்டன் சொத்துக்களாக, தமிழர்களின் கலாச்சார பாரம்பரியங்களின் அழியாச் சான்றுகளாக, வரலாற்றுப் பக்கங்களின் பொன்னேடுகளாக, பல நூற்றாண்டுகளாக கம்பீரமாக எழுந்து நிற்கும், கை, கூப்பி, மனமுருகி தொழுது, சரணாகதி அடைய வேண்டிய ஆலயங்களின் பயண அணிவகுப்பை இந்த நூலின் உதவியோடு துவங்கினால் உங்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டியாக, உற்ற துணையாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.அப்படி பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள், இக்கட்டுரைகளை நன்கு வாசித்து உணர்ந்தால் செலவு, அலுப்பு இல்லாமல், எல்லா ஊர் ஆலயங்களுக்கும் மானசீக, இலவசப் பயணம் சென்று வந்த அனுபவத்தை உணர முடியும். தமிழகத்தின் நான்கு திசைகளிலும் உள்ள ஆலயங்களுக்கும் மானசீக பயணம் மேற்கொண்டதோடு அதன் அடிப்படை வரலாற்றையும், பாரம்பரியத்தையும் அருளற்புதங்களையும் உணர்வுப்பூர்வமாக அனுபவிக்க முடியும்.