குமுதம்

குமுதம் ஒரு பக்கக் கதைகள் தொகுதி

குமுதம்

 80.00

In stock

SKU: 1000000008154_ Category:
Title(Eng)

Kumudham oru pakka kadhaigal – Thoguthi 1

Author

Pages

130

Year Published

2012

Format

Paperback

Imprint

குமுதம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஒரு பக்கக் கதைகள்தான். அதன் பலமும் அதுதான். பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள் எழுதினார்கள். அதைத் தொடர்ந்து வாசகர்கள் பலரை சிறுகதை எழுத்தாளர்களாக உருவாக்கிய பெருமை குமுதத்திற்கு உண்டு. இப்போது குமுதம் ஒரு பக்கக் கதைகள் என்ற தலைப்பில் குமுதம் பு(து)த்தகம் வெளியிட்டு இருக்கும் கதைகள் 2009-2010 வாக்கில் வெளியானவை. இதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதாக உள்ளது. எளிய நடை, எதிர்பாராத திருப்புமுனை, கதை எதைப் பற்றியது என்பதை முதல் ஐந்து வரிகளிலேயே உணர்த்திவிடும் பாங்கு, குழப்பமில்லாத கதை, நாயகன், நாயகி அறிமுகம், கதை மாந்தரே எதிர்பார்க்காத முடிவுகள், நறுக்குத் தெறித்த வார்த்தைகள், சின்னஞ் சிறிய விஷயங்கள், அவற்றில் எழும் பிரச்னைகள், படிக்கும் வாசகனை புதிய முடிவை நோக்கித் தேடிப் போகவைக்கும் உத்தி இவை எல்லாமே இந்த ஒரு பக்கக் கதைகளில் இருப்பதால் எந்தக் கதையையும் ஒதுக்காமல் படிக்க முடிகிறது. சிறு கதைகள் எழுத விரும்புகிறவர்கள் குமுதம் ஒரு பக்கக் கதைகளைப் படித்தாலே போதும், கண்டிப்பாக உங்களாலும் சிறு கதை எழுத்தாளராக உருவெடுக்க முடியும். அடுத்தடுத்த தொகுதிகள் வெளிவர உள்ளன.- குமுதம், 20.02.2013.