பரணீதரன்

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள்

விகடன்

 60.00

Out of stock

SKU: 1000000008335_ Category:
Title(Eng)

Sri Paadakacheri swamigal

Author

Pages

120

Year Published

2012

Format

Paperback

Imprint

ஸ்ரீ நாகநாத சுவாமியின் ஊழியன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட தெய்வீகப் பணியாளர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள். ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த மகான் இவர். நான் மறைந்தாலும் என்னை நம்பியிருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும், நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்… என்று அன்பர்களிடம் கூறி வந்த பாடகச்சேரி சுவாமிகள் ஆற்றிய அரும்பணிகளை ஆன்மிக உலகம் ஒருபோதும் மறக்க முடியாது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்… என்ற வடலூர் ராமலிங்க சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையில் வந்தவராகக் கருதப்படும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், நலிவடைந்த கோயில்களைக் கண்டபோதெல்லாம் வாடினார். ஊராரிடமிருந்து யாசகமாகப் பணம் வசூலித்து, அதைக் கொண்டு கோயில்களுக்குத் திருப்பணி செய்து கும்பாபிஷேகமும் நடத்தினார். இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த மகான் பாடகச்சேரி சுவாமிகளின் வாழ்க்கைக் கதையை தனக்கே உரிய எளிய நடையில் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் பரணீதரன்.