டாக்டர் அ. தாயப்பன்

முத்துக்கள் முப்பத்திரண்டு

விகடன்

 50.00

In stock

SKU: 1000000008434_ Category:
Title(Eng)

Muthukkal muppaththirandu

Author

Pages

100

Year Published

2012

Format

Paperback

Imprint

நொறுங்கத் தின்றால் நூறு வயது, பல் போனால் சொல் போச்சு என்ற முதுமொழிகளை கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு பல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பையும் சுத்தமான பற்களால் நாம் அடையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள இப்புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது.பொதுவாக, உணவு வகைகளை ருசிக்கவும், அகத்தின் கண்ணாடியான முகத்துக்கு வேண்டிய வசீகரத்தைத் தரவும், சொற்களை சரியான முறையில் உச்சரிக்கவும் உதவுபவை பற்களே! இவ்வாறு நம் நலனுக்கு உறுதுணையாக இருந்து, நன்மைகளைச் செய்துவரும் பற்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? சரியாகப் பராமரிக்கிறோமா? நமக்குள்ள கவனக்குறைவால், அக்கறையின்மையால், பற்களில் ஏற்படும் பலவித நோய்கள், கறைகள், ஈறுகளில் ஏற்படும் தொல்லைகள் ஆகியவற்றை உதாசீனப்படுத்தி, இவற்றின் பாதிப்பை நம்மில் பலர் அறிந்து கொள்ளாமலே இருக்கின்றோம்.வேண்டாதவற்றை வாயில் திணித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கி நம்மையே வெறுக்கும் அளவுக்கு பற்களைப் பராமரிக்கும்(?!) நபர்கள் நம்மிடையேயும் உள்ளனர். அவர்களுக்கான நல்ல நண்பனாக, சரியான வழிகாட்டும் துணைவனாக இந்த நூல் விளங்குகிறது.