சுரேஷ் பத்மநாபன்

காசேதான் காதலிடா

விகடன்

 60.00

In stock

SKU: 1000000008467_ Category:
Title(Eng)

Kaasethaan kaadhalidaa

Author

Pages

120

Year Published

2012

Format

Paperback

Imprint

ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகள்தான் உங்கள் கைகளை அலங்கரிக்கும் காசேதான் காதலிடா! செஸ் விளையாடுவது எப்படி?, ஆங்கிலம் பேசுவது எப்படி? என்று சகலவிதமான விஷயங்களையும் கற்றுக் கொடுக்க எத்தனையோ வகுப்புகள் இருக்கின்றன. ஆனால், பணத்தைப் பெருக்குவது எப்படி? என்று மட்டும் பொதுமக்களுக்கு கற்றுக்கொடுக்கத் தனியாக எந்தப் பள்ளிக்கூடமும் இல்லை.இது பற்றி யோசித்த போதுதான், பணம் ஈட்டுவது பாவகாரியமல்ல! என்று உரக்கப் பேசிய சுரேஷ் பத்மநாபனின் குரல் எங்கள் காதுகளுக்குக் கேட்டது.படிப்பறிவும் பட்டறிவும் ஒருசேர நிரம்பியிருக்கும் சுரேஷ் பத்மநாபன், பணம் பற்றிய தனது புரட்சிகரமான வாதங்களுக்கு வலிமை சேர்த்த விதம் எங்களைக் கவர்ந்தது. என்ன ஆச்சரியம்..! அவரது கட்டுரைகள் விகடனில் வெளிவர ஆரம்பித்ததும் பணத்தின் தன்மை பற்றி வாசகர்கள் கேள்விக்கணைகள் தொடுத்துத் தள்ளிவிட்டார்கள். பிரமித்துப்போன சுரேஷ் பத்மநாபன், வாசகர்களின் கேள்விக்களுக்கு தான் மட்டும் பதில் சொன்னால் போதாது என்று, அடிமட்டத்திலிருந்து உயர்ந்த உதாரண புருஷர்களைத் தன் கருத்துக்களுக்கு பலம் சேர்க்க உதவிக்கு அழைத்துக்கொண்டார்.