ஜெ. பிரான்சிஸ் கிருபா

மல்லிகைக் கிழமைகள்

 55.00

Out of stock

SKU: 1000000008526_ Category:
Title(Eng)

Malligai kizhamaigal

Author

கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. இந்த இரண்டு முறைகளுமே தமிழ்க் கவிதையுலகில் கையாளப்பட்டு வருகிற நடைமுறைகள்தான். ஒரு சிலருக்கு இந்த இரண்டு நடைகளுமே வாய்த்துவிடுவது உண்டு. அது பயிற்சியிலிருந்து வருவது. பிரான்சிஸ் கிருபா இரண்டாவது வகைக் கவிஞர். கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது இவருக்குக் கை வந்திக்கிறது. ஆனந்த விகடனில் இவரது கவிதைகள் மல்லிகைக் கிழமைகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளிவந்தபோது, கவிதை எழுதாத பலரும் தங்களுக்குள்ளும் கவிதை மனசு இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னது போல உள்ளத்து உள்ளது கவிதை… உண்மை தெளிந்துரைப்பது கவிதை என்பது இந்த இடத்தில் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது.