பாக்கியம் ராமசாமி

அப்புசாமி ஹி… ஹி… கதைகள்

விகடன்

 50.00

In stock

SKU: 1000000008529_ Category:
Title(Eng)

Appusamy he… He… Kathaigal

Author

Pages

100

Year Published

2012

Format

Paperback

Imprint

பாக்கியம் ராமசாமி என்றவுடன் அப்புசாமியும் சீதாப் பாட்டியும்தான் உடனே நினைவுக்கு வருவார்கள். இந்த இருவரையும் மையமாக வைத்து பாக்கியம் ராமசாமி எழுதியிருக்கும் நகைச்சுவைக் கதைகள் ஏராளம். இப்போது இந்தக் கையடக்க நூலில் அப்புசாமியின் காரெக்டரை பளீரென்று முன் நிறுத்தும் வகையில் குட்டிக் குட்டி ஹி… ஹி… கதைகளை சுவைபட எழுதியிருக்கிறார் பாக்கியம் ராமசாமி. இவற்றைப் படித்தால் உம்மனாமூஞ்சிகளின் முகத்தில்கூட அவர்களையும் அறியாமல் புன்னகை படரும். எல்லாமே சின்னக் கதைகள் என்பதால் மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்கத் தூண்டும். கதாசிரியர் கற்பனையில் கண்டு மகிழ்வித்த அப்புசாமி, சீதாபாட்டி தம்பதியை, கண்முன் கொண்டுவந்து நிறுத்திய ஓவியர் ஜெயராஜ், இந்த ஹி… ஹி… கதைகளுக்குப் பொருத்தமான படங்கள் வரைந்து அசத்தியிருக்கிறார். படித்து, சிரித்து, மகிழுங்கள்!