மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்


Author: விகடன் பிரசுரம்

Pages: 140

Year: 2012

Price:
Sale priceRs. 100.00

Description

பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக மரம் என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம்! வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும் என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே..? அப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..? என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் _ மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்! தற்போது, விவசாயிகளிடையே மரப்பயிர் வளர்ப்பு என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன.

You may also like

Recently viewed