Title(Eng) | Kovanaandi kadithangal |
---|---|
Author | |
Pages | 140 |
Year Published | 2012 |
Format | Paperback |
Imprint |
கோவணாண்டி கடிதங்கள்
விகடன்₹ 70.00
Out of stock
நம் நாட்டில் மக்களுக்கு ஆதாரமானதாக இருக்கும் விவசாயத் துறை மட்டும் மன்னர் ஆட்சிகளுக்குப் பிறகு, ஏறெடுத்தும் பார்க்கப்படாத பரிதாப நிலையில்தான் இருக்கிறது. அதிலும், மக்களாட்சி என்ற பெயரில் அரசியல்வாதிகள் வந்து அமர்ந்த பிறகு, நவீனத்துவம் என்ற பெயரில் தொழில் துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிட்ட விவசாயத்துறை, கிட்டத்தட்ட சீரழிந்தே போய்விட்டது. அதன் பலனைத்தான் உணவுப் பொருள் பஞ்சம் என்ற பெயரில் தற்போது உலகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பசி, பட்டினி போன்ற கேவலமான சூழலுக்கு இந்த உலகம் தள்ளப்பட்டுவிடும் அபாயம் காத்திருக்கிறது என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அபாய மணி அடிக்க ஆரம்பித்துவிட்டவர் கோவணாண்டி. ஜோசியமாகவோ ஹேஷ்யமாகவோ அல்ல… உலகத்தின் நாடியைப் பிடித்துப் பார்த்து அந்த ஓசையை எழுப்பினார். விவசாயம், கிராமப்புறம், சுற்றுச்சூழல் என்று பலதரப்பட்ட விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆவேசம், கிண்டல், கேலி, அறிவுரை என்று பல ரசம் ததும்ப, அரசியல்வாதிகள் மற்றும் மக்களுக்கு பசுமை விகடன் இதழ் மூலம் கோவணாண்டி முன் வைத்த முறையீடுகள்…