புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

விகடன்

 70.00

Out of stock

SKU: 1000000008552_ Category:
Title(Eng)

Neengal kaettavai

Author

Pages

140

Year Published

2012

Format

Paperback

Imprint

உழவுத்தொழிலில் என்ன கேள்விகள் இருக்கப்போகிறது…? என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம்… மனித நாகரிகத்தின் தொடக்கமே உழவுதான்! எனவே, மற்ற பல துறைகளைப் போலவே வேளாண்மையிலும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. வாசகர்கள் கேட்கும் உழவுத் தொழில் சார்ந்த கேள்விகளுக்கு… அனுபவம் வாய்ந்த உழவர்கள், உரிய நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் என்று பல தரப்பிலிருந்தும் ஆதாரபூர்வமான _ தெளிவான பதில்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் நோக்கத்துடன் பசுமை விகடன் இதழில் தொடங்கப்பட்டது நீங்கள் கேட்டவை பகுதி. பதில்களைப் படித்துவிட்டு, அவை குறித்து மேலும் தகவல்கள் பெறுவதற்கு வசதியாக பதில் சொல்பவர்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன?. அப்படி பசுமை விகடன் இதழ்களில் வெளியான கேள்வி _ பதில்களது தொகுப்புதான் இந்த நூல். விவசாய வாசகர்களது கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து கச்சிதமான பதில்களைப் பெற்றுத் தொகுத்திருக்கிறார் புறாபாண்டி (ஆத்தூர் செந்தில்குமார்). வேளாண்மை தொடர்பான கேள்விகள் பலவற்றுக்கு இந்த நூலில் விரிவான பதில்கள் உள்ளன.