பிரபு சங்கர்

கைத்தலம் பற்றிய கடவுளர்

விகடன்

 40.00

In stock

SKU: 1000000008573_ Category:
Title(Eng)

Kaiththalam patriya kadavular

Author

Pages

80

Year Published

2012

Format

Paperback

Imprint

கதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சிந்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது.இறைவனின் கல்யாண குணங்களை கதைகள் வடிவில் சொல்லி, உபந்யாசங்கள் மூலம் மக்களுக்குப் பரப்பினர். பார்வதி பரிணயம் என்பதோடு, சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், வள்ளி திருமணம், ஆண்டாள் திருக்கல்யாணம் என்று மகளிரை மையமாக வைத்து இறைவனை அடைந்தவர் கல்யாணங்களை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் நடத்தி அழகுபார்த்து பக்தி செலுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். இத்தகைய நிகழ்வுகளில் மந்திர ஸ்லோகங்களோடு அந்த அந்த தெய்வத்தின் திருக்கல்யாணக் கதைகளையும் கேட்பது மரபு.வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். கல்யாணம் செய்வது என்பது சாதாரண காரியமல்ல என்றும், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது; எனவே அதற்கு தெய்வ அருள் தேவை என்றும் நம்புகிறோம்.