அருண் சரண்யா

குருக்ஷேத்ரம்

விகடன்

 55.00

Out of stock

SKU: 1000000008577_ Category:
Title(Eng)

Gurukshethram

Author

Pages

110

Year Published

2012

Format

Paperback

Imprint

புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை படித்து அறிந்திருப்போம். அப்படி நாம் அறிந்த இடங்களுக்கு நேரில் செல்லும்போது ஏற்படுகிற உணர்வுகளும் பரவசங்களும் முழுவதும் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று. ஏனெனில், பார்ப்பது வேறு, பரவசம் வேறு… ரசிப்பது வேறு, லயிப்பது வேறு. பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், நினைத்தல் போன்ற ஏதாவது ஒரு செயலில் ஈடுபடும்போது இதில் ஒன்றில் மட்டும்தான் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம். ஆனால், ஓர் இடத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் நினைத்து, அந்த இடத்துக்கே நேரில் சென்று பார்த்து அறியும்போது ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிக்கும். அது என்றென்றும் நினைவிலிருக்கும். அதனால்தான் பயண அனுபவங்கள் அனைவருக்கும் நெகிழ்வூட்டுவதாக அமைகிறது. இந்தவகையில்தான் குருக்ஷேத்ர பூமிக்கே நம்மை அழைத்துச் சென்று, மகாபாரதப் போரின் திருப்புமுனைக் காட்சிகள் நடைபெற்ற இடங்களை மெய்யுருக தரிசிக்க வைக்கிறார் நூலாசிரியர் அருண் சரண்யா.