ஆரூர்தாஸ்

கோட்டையும் கோடம்பாக்கமும்

விகடன்

 60.00

In stock

SKU: 1000000008596_ Category:
Title(Eng)

Kottaiyum kodambakkamum

Author

Pages

120

Year Published

2012

Format

Paperback

Imprint

அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழக மக்கள்.இரண்டும் தங்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாகவே, அரசியலில் நுழைந்த சினிமா கலைஞர்களுக்குத் தகுந்த ஆதரவையும் தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். இதற்கு, அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் உச்சாணிக் கொம்புக்குச் சென்றதே இதற்குச் சான்று. சினிமா கலைஞர்களின் புகழை பிரசாரங்களுக்குப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் தங்களது வாக்குகளை உயர்த்திக் கொண்டன. சினிமா கலைஞர்களும் பொதுநல நோக்குடன், சில சமயங்களில் சொந்த வளர்ச்சிக்கும் அரசியலைப் பயன்படுத்திக் கொண்டனர்.இந்த நேரத்தில், அரசியலில் ஈடுபடும் கலைஞர்களைப் பற்றி முழுவதுமாக மக்கள் அறிந்து கொள்வது அவசியம். இதனை சிறந்த முறையில் அலசுவதற்கு தகுதியானவர் கலை வித்தகர் ஆரூர்தாஸ். கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் கதை _ வசனத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று, விருதுகள் பல குவித்துவரும் ஆரூர்தாஸ், தமிழ் சினிமா _ தமிழக அரசியல் ஆகியவற்றோடு, அரசியலில் நுழைந்த கலைஞர்களையும் நெருங்கி நின்று உற்று நோக்கி வருபவர்.