அறந்தை மணியன்

பம்மல் முதல் கோமல் வரை

விகடன்

 60.00

Out of stock

SKU: 1000000008599_ Category:
Title(Eng)

Pammal muthal Komal varai

Author

Pages

120

Year Published

2012

Format

Paperback

Imprint

உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்களைத்தான்.இப்படி மக்களோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களின் கதையையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்பவை வசனங்களே. அந்த வசனங்களே மக்களின் உணர்வுகளில் கலந்து, அவர்களை உணர்ச்சியின் பிடியில் ஆழ்த்துகின்றன.சென்ற நூற்றாண்டில் நாடகங்கள் சுதந்திர உணர்வுக்கு வித்திடும் வகையில் செய்திகளைத் தாங்கிச் சென்றன. பின்னர், சமூக சமய முன்னேற்றத்துக்கான செய்திகளைத் தாங்கிச் செல்லும் ஊடகமாக நாடகம் திகழத் தொடங்கியது. அதன் வேராக விளங்கியதும் வசனங்களே!பிற்காலத்தில் நாடகங்களின் அடிப்படையில் பேசும் திரைப்படங்கள் வந்த பிறகு, திரைப்பட வரலாற்றில் ஏராளமான வசனகர்த்தாக்கள் தங்கள் எழுத்துத் திறமையால் திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தார்கள்; அதன் மூலம் மக்கள் மனங்களில் கருத்துகளை விதைத்தார்கள்.