பரணீதரன்

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்

விகடன்

 45.00

Out of stock

SKU: 1000000008605_ Category:
Title(Eng)

Dheetchidhar paadiya thiruththalangal

Author

Pages

90

Year Published

2012

Format

Paperback

Imprint

சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் புனைந்து சரித்திரம் படைத்த சங்கீத சாதனையாளர்! பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விடனில் தொடர் எழுத பரணீதரன் காசியாத்திரை மேற்கொண்டபோது, தீட்சிதர் ஐந்தாண்டு காலம் காசியில் தங்கியிருந்ததைப் பற்றி அறிந்தார். அங்கு தீட்சிதர் ஆராதித்ததாகக் கூறப்படும் சிவலிங்கத்தையும் தரிசித்தார். அதன் பிறகு அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. விளைவு, சென்னை திரும்பியதும் அதற்கான முயற்சிகளில் முழு வீச்சில் ஈடுபட்டார். அதையொட்டி தீட்சிதர் பயணம் செய்த திருத்தலங்களை விசாரித்து அறிந்து, அந்த இடங்களுக்கெல்லாம் விஜயம் செய்தார். பின்னர் அந்தந்த இடத்தில் கிடைத்த, நம்பத் தகுந்த தகவல்களது அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும் அதையொட்டிய சம்பவங்களையும் இணைத்து விகடனில் எழுதினார். அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.