பொதுத் தமிழ்


Author: சி. கலா சின்னத்துரை

Pages: 300

Year: 2012

Price:
Sale priceRs. 150.00

Description

இன்றைய இளைஞர்கள் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பு என்பது இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கனவாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்தை எந்த அளவுக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அரசுப் பணி மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கில் இருக்கும் அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கிலான இளைஞர்கள் போட்டி போட்டு தேர்வு எழுதுகிறார்கள். மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்து மிகச் சிலரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நம் அரசு, அதற்கேற்றபடி கேள்விகளைக் கேட்கும் விதத்திலும், தேர்ந்தெடுக்கும் பக்குவத்திலும் மிகுந்த கவனம் காட்டுகிறது. வெறுமனே மனப்பாடம் செய்துகொண்டு தேர்வுக்குப் போய் மதிப்பெண் பெறுவது இனி சாத்தியம் இல்லாதது. தேர்வுத்துறை சமீபகாலமாகத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளில் பாடத்திட்டத்தின் பங்களிப்பு மிகுதியாக இருக்கிறது. 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருந்தே நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனை நுட்பமாக உணர்ந்து மிகச் சரியான முறையில் பொதுத் தமிழ்க் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாக இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. எல்லாத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை இப்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்காக நாம் படிப்பதற்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாம் படிப்பதற்கும் வித்தியாசம் அதிகம். அந்த நுட்பத்தை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்தும். பாடத்திட்டங்களில் இருந்து எப்படி கேள்விகள் எடுக்கப்படுகின்றன? ஒரே கேள்வியை எப்படி மாற்றிக் கேட்பார்கள்? மிக முக்கிய வினாக்கள் எவை? நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய விவரங்கள் எவை என்கிற அத்தனை விதமான கேள்விகளுக்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது. தமிழக அரசுத் துறை சார்ந்த எந்தத் தேர்வாக இருந்தாலும் அதில் மிக முக்கியமான பகுதியாக பொதுத் தமிழ் இடம்பெறும். பொதுத் தமிழில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்களில் பாதி தமிழுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பொதுத் தமிழில் கவனம் செலுத்தினால் சுலபமாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பொதுத் தமிழுக்கான இலக்கணம், செய்யுள், உரைநடைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்கள், பயிற்சிக்கான கேள்விகள் என அற்புதமான தொகுப்பாக மிளிர்கிறது இந்த நூல். உங்களின் வெற்றிக்கு விகடன் பிரசுரத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

You may also like

Recently viewed