லாரா கோப்பா

கத்தியின்றி ரத்தமின்றி..!

விகடன்

 95.00

In stock

SKU: 1000000008683_ Category:
Title(Eng)

Kaththiyindri raththamindri..!

Author

Pages

190

Year Published

2012

Format

Paperback

Imprint

எப்படியும் -வாழலாம் என வாழ்பவர்கள் ஏராளம். இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்வை வகுத்து வாழ்பவர்கள், புகழின் சுவடுகள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய புகழ் வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் கிருஷ்ணம்மாள் _ ஜெகந்நாதன் தம்பதி.வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியவுடன், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டாடினர். ஆனால், ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் மனிதர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தர தாம் வாழும் பாதையை போராட்டக்களமாக்கி இந்தத் தம்பதி இப்போதும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.பண்ணையார்களிடம் காலம் முழுவதும் உழைத்தாலும், அதில் கிடைத்த சொற்ப கூலியைப் பெற்ற ஏழை மக்கள் வாழ்வில் மாற்றம் பெறாமல் இருந்தனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற எண்ணி, இருப்பவர்களிடம் நிலத்தை தானம் பெற்று, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க பூதான இயக்கத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தினர்.