உன்னிகிருஷ்ணன் புதூர்

கஜராஜன் குருவாயூர் கேசவன்

விகடன்

 50.00

In stock

SKU: 1000000008685_ Category:
Title(Eng)

Gajarajan Guruvayur Kesavan

Author

Pages

100

Year Published

2012

Format

Paperback

Imprint

உலகில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை! இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கேரளத்தில் அது பெற்றிருக்கும் இடம் எல்லாவற்றையும்விட உயர்வானது. மாப்ளா கலகத்தின்போது கலவரக்காரர்களால் சிறைப் பிடிக்கப்பட்டதில் ஆரம்பித்து கஜராஜனாக குருவாயூர் கோயிலில் மரித்த _ மன்னிக்கவும், சரிந்த _ நிமிடம் வரையிலான அதன் வாழ்க்கையை நுட்பமாகவும் அற்புதமாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் உண்ணிகிருஷ்ணன் புதூர். குருவாயூர் கேசவன் வெறும் கோயில் யானை அல்ல. பெரும்பாலான கேரளீயருக்கு அது குருவாயூரப்பனின் இன்னோர் அவதாரமே! கேசவனும் யானைகளிலேயே உயர்வான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கிறது. குருவாயூர் கோயிலில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த கேசவனது வரலாறை நூலாசிரியர் உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. மதம் இளகிய நிலையிலும்கூட எந்தவொரு உயிருக்கும் சிறு தீங்குகூடச் செய்யாமல், மரம் அறுக்கும் இடத்தில் இருந்து குருவாயூர் கோயிலுக்கு நடந்தே வந்து சேர்ந்திருக்கிறது கேசவன்!