ரிங்கி பட்டாச்சார்யா

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்

விகடன்

 60.00

In stock

SKU: 1000000008691_ Category:
Title(Eng)

Kadhavugalukku pinnaal kanneer padhivugal

Author

Pages

120

Year Published

2012

Format

Paperback

Imprint

கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து… கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்க வேண்டியிருக்கிறது! விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்று வலது காலெடுத்து வரச் சொல்லிவிட்டு, அவளையே சொக்கப்பனையாக எரித்துப் போடுகிற இரக்கமற்ற ஜென்மங்களை சமூகம் தினம் தினம் சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறது! பெண்கள் பொறுமையின் சிகரங்கள், அறுத்துப்போட்டாலும் அன்பைத் தவிர வேறெதுவும் சுரக்கத் தெரியாதவர்கள் என்பதுதான் அவர்களுக்கு எதிரான கொடுமைகள் பல்கிப் பெருக முக்கியக் காரணம். கூடவே, குடும்ப கௌரவம் என்ற பெயரில் அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு, எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அவளைப் பொறுத்துப் போகச் சொல்லி, மீண்டும் மீண்டும் மிருகத்தின் கூண்டுக்குள்ளேயே தள்ளிவிடுகிற பெற்றோரை யார் மாற்றுவது? சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட பிஹைன்ட் த க்ளோஸ்ட் டோர்ஸ் புத்தகம், இந்தத் துன்பக் கடலில் இருந்து உப்புக்கரிக்கும் சில துளிகளை மட்டும் நம் முன் எடுத்து வைக்கிறது. அதன் தமிழ் வடிவமே இந்நூல்.