தாணு

தாணு ஜோக்ஸ்

விகடன்

 55.00

In stock

SKU: 1000000008696_ Category:
Title(Eng)

Dhaanu Jokes

Author

Pages

110

Year Published

2012

Format

Paperback

Imprint

நாட்டு நடப்புகளை ஓவியங்களாகப் பதிவு செய்வதுதான் ஒரு பத்திரிகை ஓவியரின் கடமை. அதையே, சமூகக் கோபத்தோடு சொல்லும்போது கார்ட்டூன் ஆகிறது; நையாண்டியோடு சொல்லும்போது நகைச்சுவையாகிறது.இந்த இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஏனென்றால், நகைச்சுவைத் துணுக்குக்கு நடுவே சீரியஸாக கார்ட்டூன் முகம் எட்டிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இரண்டு தூரிகை வைத்துக்கொண்டு எழுதியதுபோல் அரசியல் கார்ட்டூன்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் கோடு போட்டு பிரித்துக் கொண்டு அசத்தியவர் தாணு. காலத்தின் கோலத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பல நகைச்சுவைத் துணுக்குகளைத் தந்திருக்கிறார் தாணு.ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, விகடனை விட்டு விலகி முழுநேர கார்ட்டூனிஸ்ட் ஆக பல பத்திரிகைகளில் பணிபுரிந்தாலும், தன்னுடைய பொற்காலம் விகடனில் இருந்த காலம்தான் என்கிறார் இப்போதும். இப்படிப்பட்ட ஓவியர்களையும் கார்ட்டூனிஸ்ட்களையும் பெற்றிருப்பதுதான் விகடனின் வரம்!