கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம்

கடலாங்குடி

 1,400.00

In stock

SKU: 1000000017199_ Category:
Title(Eng)

Bramma Sooththira Sri Sankara Bhashyam

Author

Pages

2700

Year Published

2012

Format

Paperback

Imprint

தேவநாகரி எழுத்தில் மூலமும் தமிழுரையும். மூன்று வால்யூம்கள் (1500 பக்கங்கள்). புத்தகத்தின் சைஸ் – Royal Crown (துக்ளக் Size).இரும்புக் கடலையை வறுத்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். அதுதான் ப்ரம்ம சூத்திர சங்கர பாஷ்யத்தின் விரிவுரை. 1931 ஆம் ஆண்டு முதன் முதலில் முதற்பதிப்பாக வெளிவந்தது. பலரின் பாராட்டுக்களையும், நன்மதிப்பையும் பெற்ற அருமையான இந்த கிரந்தம் மறுபதிப்பாக ஆன்மீக மக்களையும் ஆராய்ச்சியாளர்களையும் மகிழ்விக்கும் நிலையில் 64 ஆண்டுகளுக்குப்பின் 3 வால்யூம்களாக வெளிவந்துள்ளது. கடலங்குடிப் பெரியவரால் முதல் முதலில் எளிய நடையில் தேவநாகரி மூலத்துடனும், தமிழ் மொழி பெயர்ப்புடனும் வெளியிடப்பட்ட இந்த நூல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு சூத்திரமும் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருக்கிறது. பாமதி, கல்பதரு, பரிமளம், ப்ரம்ஹவித்யாபரணம், ராமநந்தீயம், நியாயரக்ஷாமணி முதலிய வியாக்கியானங்களை யொட்டி ஆங்காங்கு குறிப்பெழுதி விளக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வைதஸித்தாந்தத்தை யொட்டி சூத்திரார்த்தங்களை தெளிவாய் விளக்கி ஒவ்வொரு அதிகரணத்திலும், வித்தியாரண்ணிய சுவாமிகளால் இயற்றப்பட்ட வையாஷக நியாய மாலையை எழுதி அதற்கும் கருத்துரை எழுதியும் வெளியிட்டுள்ளார்.ஸ்ரீ சங்கர பாஷ்யம் முழுமையும் 4 அத்யாயங்களாகத் தொகுக்கப்பட்டு 3 வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன.அச்சுக்கூலியும் பேப்பர் விலையும் விளம்பர கட்டணமும் விஷம்போல் ஏறியுள்ள இந்தச் சமயம் ராயல் கிரெளனில், புத்தகம் போடுவது மிகவும் சிரமமானது, ஆயினும் கடலங்குடிப் பெரியவரின் புத்தக வெளியீடு யாவராலும் போற்றப்பட்டது ஆகவே அன்னாரின் புகழை நிலைநாட்டவும், புத்தக மறுபதிப்பில் எந்தவித சொற்பிழையோ கருத்துப் பிழையோ, அச்சுப்பிழையோ ஏற்பட்டு, அன்னாரின் கடுமையான உழைப்பிற்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க எல்லா அத்யாயங்களையும் வெளியிட்டுள்ளோம். (தற்போது 3 வால்யூம் (Hard Bound) அட்டையுடன் கிடைக்கும்).