அழகர் நம்பி

போதி தர்மர்

சிக்ஸ்த் சென்ஸ்

 222.00

In stock

SKU: 1000000021842_ Category:
Title(Eng)

Bodhi Dharmar

Author

Pages

288

Year Published

2013

Format

Paperback

Imprint

கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். ஆக, புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள்.எனில், யார் இந்த போதி தர்மர்?போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்றும் முக்கியமான கேள்வி இதுதான். கூடவே, அவருடைய பூர்வ வாழ்க்கை குறித்த பல சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. போர்க்கலை உள்ளிட்ட அவருடைய பங்களிப்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை நோக்கிய தேடல் முயற்சியே இந்தப் புத்தகம்.அந்தத் தேடலைத் தொடங்கியபோது மூன்று உண்மைகளை உணரமுடிந்தது.* புத்தரைப் புரிந்துகொள்ளாமல் பௌத்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது.* பௌத்தத்தைப் புரிந்துகொள்ளாமல் போதி தர்மரைப் புரிந்துகொள்ள முடியாது.* போதி தர்மரைப் புரிந்துகொள்ளாமல் ஜென் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது.புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். மேலே இருக்கும் மூன்று உண்மைகளையும் உணர்வீர்கள். கூடவே, புத்தர், போதி தர்மர் இருவரும் சொன்ன செய்திகளையும்!