Title(Eng) | Karutha Lebbai |
---|---|
Author | |
Pages | 120 |
Year Published | 2013 |
Format | Paperback |
Imprint |
கருத்த லெப்பை
எதிர் வெளியீடு₹ 70.00
In stock
இவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்ணை உருண்டை செய்து வைப்பாள். கருத்தலெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் – தமிழ்ச்சேவை இரண்டு.”