சார்லி சாப்ளின்

என் கதை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

 190.00

In stock

SKU: 1000000021994_ Category:
Title(Eng)

En Kathai

Author

Pages

228

Year Published

2013

Format

Paperback

Imprint

பெருங் கலைஞர்கள் இந்தப் புவியில் அதிசயங்களை ஸ்தாபிப்பவர்கள் என்பதற்கான காலாதீத உதாரணங்களில் ஒருவர் சார்லி சாப்ளின். உலக முழுதுமுள்ள எண்ணற்ற ரசிகர்களைத் தன் கலா வல்லமையால் ஈர்த்ததொரு பேராளுமை. கற்பனையிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் உள்ள தனித்துவம், பிற கலைஞர் எவருக்கும் சித்திக்காத ஒன்று. சாப்ளின், ஓர் எளிய மனிதனும் படைப்பின் தேவதையுமாவார். மனங்கொள்ளாத் துயரமும் களங்கமற்ற மகிழ்ச்சியும் இவர்தான்.இளம் பருவ வாழ்க்கையின் சம்மட்டி வழுீச்சுகளாக வந்து வந்து மோதி நெஞ்சுடைத்த துன்பங்கள் – அளப்பரிய நிராதரவு – திசையற்ற கதிக்கேடு அனைத்தையும் உட்கொண்ட இவரது சாரம் காலத்தே, படைப்பின் பெருமனதாய்ப் பரிணமித்தது. சிரிப்பும் கண்ணீருமான இந்தப் பேரன்பை உங்கள் இதயத்தோடு இணைக்கும் எளிய முயற்சியே இந்தப் பதிப்பு.