Author: ஜெயமோகன்

Pages: 282

Year: 2014

Price:
Sale priceRs. 380.00

Description

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அர்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனு பவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது & அதாவது எழுதும் கணத்தில் & ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்

You may also like

Recently viewed