அசோகமித்திரன்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

காலச்சுவடு

 200.00

In stock

SKU: 1000000022018_ Category:
Title(Eng)

Inspector Shenbagaraaman

Author

Pages

220

Year Published

2014

Format

Paperback

Imprint

அச்சில் வந்த என் புத்தகங்களைப் பார்க்க எனக்குத் தயக்கம். பயம் என்றுகூட கூறலாம். காரணம் அச்சுப்பிழைகள். ஒருமுறை என் பதிப்பாளரிடம் பிழை திருத்தம் போடலாமா? என்று கேட்டேன்.புத்தகம் வந்ததே என்று சந்தோஷப்படுங்கள் என்று கூறினார் அவர். இந்த அனுபவத்திற்குப் பிறகு நான் என் நூல்களைப் படித்துப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால் தேர்ந்தெடுத்த குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று சமீபத்தில் வந்தது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு என் குறுநாவல் ஒன்றை நான் மீண்டும் படித்தேன். நிறைவாக இருந்தது.விழா என்ற குறுநாவலை நானே காலவாசி வெட்ட வேண்டியிருந்தது. தீபம் பார்த்தசாரதி ஒருமுறை வெளியூர் சென்றிருந்தார். அந்த ஒரு இதழை நான் முடிக்க வேண்டியிருந்தது. இருபது பக்கத்துக்கும் மேலாக வரும் குறுநாவலை பதினோரு பக்கங்களில் குறுக்க வேண்டியருந்தது. எங்கெல்லாம் வெட்டினேன் என்று எனக்கே உறுதியாகக் கூற முடியவில்லை.