பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன்

கு.ப.ரா. சிறுகதைகள்

காலச்சுவடு

 495.00

In stock

SKU: 1000000022036_ Category:
Title(Eng)

Ku.P.Ra.Sirukathaigal

Author

Pages

920

Year Published

2014

Format

Hardcover

Imprint

தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைக்குள் கிடந்த கதையைச் சேர்த்தும் கதைக்குள் கிடந்த கட்டுரைகளை விலக்கியும் அவர் எழுதாத கதைகளை நீக்கியும் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டும் இதழ்களில் இருந்து புதிய கதைகளைக் கண்டடைந்தும் நவீன இலக்கியப் பதிப்புகளுக்கு அவசியமான பின்னிணைப்புகளுடன் தெளிவாகச் செய்யப்பட்டுள்ள செம்பதிப்பு இது. ஆய்வாளருக்குப் பயன்படும் விரிவான பதிப்புரையும் வாசகருக்கு உதவும் வகையில் கதை நுட்பங்களை விளக்கும் ஆய்வுரையும் இப்பதிப்பின் சிறப்புகள்.