இயற்கை வழியில் வேளாண்மை


Author: மசானபு ஃபுகோகா

Pages:

Year: 2014

Price:
Sale priceRs. 600.00

Description

இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை இவர் வலியுறுத்தினார்.இவரது வேளாண்மை முறையை ‘ இயல்முறை வேளாண்மை ‘ என்றும் ‘ எதுவும் செய்யாத வேளாண்மை ‘ என்றும் அழைக்கின்றனர். ஃபுகோகாவின் வேளாண்மை முறை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடைபிடிக்கப்படும் இயற்கை வேளாண் முறைகளுக்கு இணையானது.ஃபுகோகா தனது வேளாண்மை முறையை மேற்கத்திய வேளாண்முறைகளிலிருந்து மேம்படுத்தி மண்வளம் குன்றாமல், தேவைக்கு மிகுதியான உடலுழைப்பு இல்லாமல் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது என்று நிறுவ முயன்றனர். ஃபுகோகா தான் பயிலும் உழவு முறையை ‘ இயற்கை உழவு முறை ‘ என்று அழைக்கலானார். அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் ஜப்பான் நாட்டிற்கு பொருந்துவதாக இருப்பினும், அச்செயல்பாடுகளின் உள்ளார்ந்த கொள்கைகள் உலக நாடுகள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஃபுகோகாவின் முறைகளில் இயற்கைச்சூழல் கூடுமான வரை பேணப்படுகின்றது. சரியான சூழல் அமைத்துக்கொடுக்கப்படும்போது விதைகள் உழவு செய்யாமல் முளைக்க வைக்கப்படுகின்றன. செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் ஃபுகோகாவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடிக்கவல்லது.

You may also like

Recently viewed