பெ.சு. மணி

இந்தியாவில் தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்

பூங்கொடி பதிப்பகம்

 80.00

In stock

SKU: 1000000022740_ Category:
Title(Eng)

Indhiyavin Desiya Congrasin Thanthai A.O.Hahyum

Author

Pages

176

Format

Paperback

Imprint

தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். மதுரையை நாயக்கர்கள்தான் ஆள வேண்டும். மாடவீதியை மன்னார்சாமிதான் ஆள வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து வலுத்து வரும் காலம் இது.இந்தச் சூழலில் பெ.சு.மணியின் இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம் என்ற புத்தகம் அவசியப்படுகிறது. மாநில எல்லைகளை கடந்து, மொழி வேற்றுமையைப் புறந்தள்ளி, இந்தியப் பெருநாட்டின் மக்களுக்காக நடத்தப்பட்ட விடுதலைப் போரின் பின்னணி பற்றி இந்த நூல் பேசுகிறது.அதிலும், தேசிய இக்கமான காங்கிரசை தோற்றுவித்தவர், ஒரு ஆங்கிலேயர் என்பது ஆச்சரியமான செய்தி. யார் அவர்? அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு கையேடு. ஹ்யூம் யாருக்காக பாடுபட்டார் என்பது குறித்து, ஒரு சர்ச்சை உள்ளது. ஆங்கில ஆட்சிக்கு எதிராகத் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து, சாம்ராஜ்யத்தைக் காபந்து செய்வதற்காகத்தான் அவர், காங்கிரசை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது.அந்த வகையில் ஹ்யூமைப் பற்றிய புரிதலுக்கு இந்த நூல் உதவுகிறது. அதே நேரம், காங்கிரஸ் பேரியகத்தின் தோற்றம் பற்றி விரிவான தகவல்களை கொடுக்கும் இந்த நூலின் முன்பகுதியில், ஹ்யூம் என்ற பெயரைத் தேடிப் பார்த்தாலும் தென்படவில்லை. பாதி பக்கங்களைக் கடந்த பிறகுதான், அவரைப் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.