நா. மம்மது

இந்திய இலக்கியச் சிற்பிகள்-ஆபிரகாம் பண்டிதர்

சாகித்திய அகாதெமி

 50.00

In stock

SKU: 1000000022973_ Category:
Title(Eng)

Indhiya Ilakkiya Sirppigal-Abraham Pandithar

Author

Pages

112

Year Published

2014

Format

Paperback

Imprint

திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் வாழ்ந்து இசைத் தமிழுக்கு தன்னிகரில்லா தொண்டாற்றி மறைந்த ஆபிரகாம் பண்டிதரைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்த நூல்.இசை, வேளாண்மை, ஜோதிடம், சித்த மருத்துவம், அச்சுத் தொழில் பல துறை வித்தகராக விளங்கிய ஆபிரகாம் எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரண புருஷன் என்பதை நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்.இசை ஆய்வாளர்களுக்கு முன்னோடியாகவும் தமிழிசைக்கு இலக்கணம் வகுத்தவர்களில் முதன்மையானவருமான ஆபிரகாம் பண்டிதரை நமக்கு நினைவுபடுத்திய பெருமை இந்த நூலுக்கு உண்டு.இன்றைய இளைஞர்கள் கற்றறிய வேண்டிய நூலில் இதுவும் ஒன்று என்பதை மறுபதற்கில்லை. இந்நூலில் பண்டிதரின் முடிவுரையில், அந்தக் காலத்தில் இழிந்த சாதியினராக கருதப்பட்ட வம்சத்தில் ஆபிரகாம் பண்டிதர் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரியான வார்த்தையாகத் தோன்றவில்லை. இழிந்த என்ற சொல்லுக்குப் பதிலாக உரிமைகள் மறுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம்.