உரப்புளி நா.ஜெயராமன்

மஞ்சத்தண்ணி

 70.00

In stock

SKU: 1000000024096_ Category:
Title(Eng)

Manjathanni

Author

Pages

127

Year Published

2013

Format

Paperback

எளிமையான துவக்க நிலை சிறுகதைகள். 1970களில் தொடங்கி 2009 வரை ஜெயராமன் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு இது.வளர்ப்பு ஆட்டை பலி கொடுக்க விரும்பாத சிறுமி, கஞ்சத்தனம் பிடித்த பணக்காரர், செய்த வேலைக்கு நியாயமான கூலி, உள்ள பொருளுக்கு சரியான விலை, கடவுளின் இருப்பிடம் மனது, மனைவியை உதாசீனம் செய்யும் கணவன், மனைவியை அடிக்கும் கணவன், ஒரு சிறிய ஊரின் முதல் தொலைபேசி, வயது வந்த பெண்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல அறிவுரை என எளிய வாய்ப்பாடாக, நல்ல விஷயங்களை எளிமையான நடையில், இச்சிறுகதைகள் வசப்படுத்த முயன்றுள்ளன.அனைத்து சிறுகதைகளும் கூடிய மட்டும் பேச்சு நடையில் உரையாடல் பாணியில் எழுதப்பட்டுள்ளன. இவையே சிறுகதைகளின் பலம்.அதே நேரத்தில், வாசகனின் யூகத்திற்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்காது, நடுநடுவே, ஆசிரியரே முன்கதைச் சுருக்கம் – கதை மாந்தர் தம் எண்ண ஓட்டம் – பின் கதை என அனைத்து விஷயங்களையும் “நினைத்தார், கோபம்கொண்டான், சீறினான், பொருட்படுத்தவில்லை, கவலைப்பட்டார், நோக்கினார், மலர்ந்தது’ என்று பல இடங்களில் நேரடியாக குறிப்பிடுகிறார். இவை சிறுகதையின் தரத்தை பாதிக்கிறது. ஒவ்வொரு சிறுகதையிலும் உறுதியான தெளிவான கதை இருந்தும் நிகழ்த்திக் காட்டும் அம்சம் குறைந்து ஒரு உரை போல் கதைச் சுருக்கம் போல் நீள்கிறது. கதைக் களங்களின் புற விவரிப்பிற்கு கூடுதல் விஷயங்கள் சேர்த்திருக்கலாம்.வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட சிறுகதைகள். தேர்வு செய்த ஆசிரியரின் முனைப்பு பாராட்டுக்குரியது. மஞ்சத்தண்ணி – துவக்க நிலை வாசகர்களுக்கான நம்பிக்கைக் கதைகளின் தொகுப்பு.