Author: டாக்டர் M. ராஜேந்திரன்

Pages: 543

Year: 2016

Price:
Sale priceRs. 550.00

Description

இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய போராட்டமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகும்.உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போராட்டங்களின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் இருந்தது தனிநபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், கொஞ்சம் ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.முதல் இந்திய சுதந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, பதினெட்டாம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டீஷ் இந்தியா காலத் தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை என இந்த நாவலில் பல்வேறு கதைக்களன்களை ஆழமாக விரித்துச் செல்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன்,

You may also like

Recently viewed