கனவுப் பட்டறை


Author: மதி

Pages: 160

Year: 2016

Price:
Sale priceRs. 160.00

Description

மனித மனம் விசித்திரமானது. கால நீரோட்டத்திற்கேற்ப தன் பாதைகளை மாற்றியமைத்துக் கொள்ள அது சற்றும் தயங்குவதில்லை. ஒரே விஷயத்தில் வளர்ந்தவர்களின் பார்வையும், வளரிளம் பருவத்தினருடைய கருத்தும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருப்பதன் காரணம் இதுதான். வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமானது. அந்தப் , பருவத்தில் நம் ஆழ்மனதுள் பதிகிற விஷயங்கள்தான் நம் வாழ்வின் கடைசி வரை நிலைக்கும். வளரிளம் பருவத்தை வார்ப்பதென்பது கத்தி மீது நடப்பதற்கொப்பானது. வலிந்து திணித்துவிட முடியாது. இயல்பாக அதன் போக்கில் சென்று வசப்படுத்த வேண்டும். இதைச் செய்ய பண்பட்ட மனம் வேண்டும். வளர்ந்த நமக்கு அது பெரும்பாலும் இருப்பதில்லை. நம் குழந்தைகளின் மீது கருத்து திணித்தலையும், மன ரீதியான வன்முறையையும் நம்மையறியாமலே வெகு இயல்பாகச் செய்து வருகிறோம். அவர்கள் உலகில் நுழைந்து. அவர்களோடு உரையாடத் தயங்குகிறோம். இதை எப்படிச் செய்வது? செய்தால் வரும் தலைமுறை எப்படியெல்லாம் சிறந்து விளங்கும்? இதைத்தான் இந்தச் சிறுகதைகள் பேசுகின்றன. நன்கு பழகிய நண்பனோடு பேசுகிற தொனியில் சரளமான விவரணையோடு இந்தக் கதைகளை எழுதியிருக்கிறார் மதி. சொல்ல வந்ததைத் தெளிவாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி தன் கதைகளின் மையப்புள்ளியைத் தொட்டிருக்கும் மதிக்கு இது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

You may also like

Recently viewed