மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்


Author: ஹரன்பிரசன்னா

Pages: 82

Year: 2019

Price:
Sale priceRs. 100.00

Description

அறிவியல் சொல்லும் உண்மைகளுக்கும் நிஜமான முற்போக்குக் கருத்துகளுக்கும் நான் நிச்சயம் எதிரி அல்ல. அவை தேவையானவைதான். ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் என்ற ஒன்று உண்டு என்ற மனப்பான்மையை ஊட்டக் கூட மறுக்கும் போக்கையே நான் கண்டிக்க முயல்கிறேன். அதேபோல் நாட்டுப்பற்று, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஆக்கப்படும் போக்கையும் எதிர்க்கிறேன். இவையே என் சிறுவர் கதைகளுக்கான அடிப்படை. நம் மரபில் இத்தகைய மூத்தாப்பாட்டிகள் குடும்பம் தோறும் வீடுதோறும் வீதிகள்தோறும் இருந்தார்கள். நம் மரபான கதைகள் எல்லாம் பிற்போக்கு என்ற எண்ணம் ஆழ மீள மீள விதைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புயலில் நம் மரபான கதைசொல்லிப் பாட்டிகள் கிட்டத்தட்ட அழிந்த இனமாகி விட்டார்கள். இக்கதை முறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் முக்கியமானது. இதுவே நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/ மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்.- ஹரன் பிரசன்னா

You may also like

Recently viewed