வாசிப்பது எப்படி


Author: செல்வேந்திரன்

Pages: 0

Year: 2020

Price:
Sale priceRs. 100.00

Description

*வாசிப்பது எப்படி? - செல்வேந்திரன்*
*('வாசிப்பது எப்படி? என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி ! இன்னும் சிலரோ நமக்குத்தான் வாசிக்கத்தெரியுமே என்பார்கள்! இருவருக்கும் சேர்த்து ஒரு நூல் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காக *வாசிப்பது எப்படி* என்கிற இந்நூலை விமர்சனம் செய்கிறேன்!)*
இந்நூலில் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார், ஆனால் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல் என்பதை நாம் அறிவது நலம்.
முக்கியமான விடயங்களை இந்நூல் பேசுகிறது.
அதில் ......
* வாசிப்பதற்கான அவசியம்!*
* வாசிப்பினால் ஏற்படும் நன்மைகள்!*
* வாசிப்பினால் சிகரம் தொட்டவர்கள்!*
* வாசிப்பிற்கு ஏற்படும் தடைகள்!*
* வாசிப்பை மேம்படுத்த வழிகள்!
* நாளிதழ் வாசிப்பின் அவசியம்!*
* சிக்கலான நூல்களை எப்படி கையாள்வது!*
* செலவு இல்லாமல் எப்படி வாசிப்பது!*
* பரிந்துரை பட்டியல்!*
என பலவிடயங்களை
அருமையான

கருத்துக்களைக்கொண்டு அழகுபடுத்தியிருப்பார் ஆசிரியர்.

இப்புத்தகத்தில் ஒரு வாசகம் வரும்
அது.....
*"நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்க சொல்லாதீர்கள். வாசித்ததைச் சொல்லுங்கள். போதும்."*
*வாசிப்பை அறிமுகம் செய்யவும் , அதனை வளர்த்தெடுக்கவும் மிகச்சிறந்த புத்தகம் *வாசிப்பது எப்படி*.

You may also like

Recently viewed