எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்


Author: க.மணி

Pages: 134

Year: NA

Price:
Sale priceRs. 120.00

Description

“அறிதோறு அறியாமை” என்று திருவள்ளுவ நாயனார் கூறியது எத்தனை உண்மை. ஓர் உண்மையைத் தேடிச் சென்று கண்டுபிடித்ததும் அதற்குள் எத்தனை கோடி உண்மைகள் ஒளிந்திருக்கின்றன என்பது தெரியவருகிறது. உண்மையில் அறிவு நமது அறியாமையைத்தான் மேலும் மேலும் வெளிப்படுத்துகிறது. இந்த நூலைப் படித்ததும் நான் சொல்வது எத்தனை உண்மை என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.
பேக்டிரியா என்கிற சொல்லைக் கேட்டதும் ‘கண்களுக்குத் தெரியாத மிகவும் நுட்பமான கிருமிகள்; பயாலஜி மாணவர்கள் படிப்பது; சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்குக் காரணம்’ என்றுதான் உங்கள் மனத்தில் அபிப்ராயம் தோன்றும். நீங்கள் அறிந்து வைத்திருப்பது உண்மைதான்; ஆனால் கங்கையாற்றில் உள்ள மணலில் ஒரு மண்ணுக்குத்தான் சமானம்.
என்னிடம் அனுகூலமான பேக்டிரியாவும் உள்ளன, பிரதிகூலமான பேக்டிரியாவும் உள்ளன. இதில் எது வெற்றி பெறும்? எதை நான் ஊட்டி வளர்க்கிறேனோ அது வெற்றி பெறும்! தாய்ப்பாலில் உள்ள நூற்றுக்கணக்கான சக்கரைகள் குழந்தைக்குப் பயனற்றவை! அவை குழந்தைக்காக அல்ல; குழந்தை வயிற்றில் வளரும் அனுகூலமான பேக்டிரியாக்களுக்காக! குழந்தையின் மூளையை வளர்க்கும் சியாலிக் அமிலத்தைத் தரும் பேக்டிரியாக்களுக்காக!
ஒவ்வொரு பக்கத்திலும் திடுக்கிடும் விஷயம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. இவை கங்கை மணலில் ஒரு கரண்டிதான். ஒரு அறிமுகம்தான் செய்திருக்கிறேன். ஆராய்ச்சிக் கண் கொண்ட இளம் மாணவர்கள் மீதியைக் கண்டறியட்டும்.

You may also like

Recently viewed