அ. வெண்ணிலா

சாலாம்புரி

அகநி

 400.00

SKU: 1000000030933_ Category:
Title(Eng)

Salampuri

Author

Pages

448

format

Year Published

2020

Imprint

மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும், அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக்கிறது. வாழ்க்கைத் தனக்கு அணுக்கமாகச் சிலரை வைத்துக் கொண்டிருக்கிறது. சிலரைத் துயரத்தின் எல்லைவரை விரட்டிச் சென்றிருக்கிறது. கொள்கையும் அரசியல் சித்தாந்தமும் மனிதகுல நல்வாழ்விற்கான ஆர்வமும் கொண்ட ஒருவன் சுய தேடலோடு வாழ்வைத் தன் அகச்சுடரின் வெளிச்சத்தில் கண்டடையும் பயணத்தின் தொடக்கப் புள்ளியே சாலாம்புரி நாவல்.