மன அழுத்தத்திலிருந்து நிம்மதி


Author: க. விஜயகுமார்

Pages: 168

Year: 2020

Price:
Sale priceRs. 180.00

Description

நிம்மதியான வாழ்க்கைக்கு நல் வழிகாட்டி! மனிதன், ‘தன்னை உணர’ சில தேவைகளைப் பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை அழகாக விளக்குகிறார் விஜயகுமார்.
தேவையே இல்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவை கிடைக்காமலே சிலர் மறைகின்றனர். எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களுக்கிடையே மனப் பிரச்னை இருக்கிறது.
ஆங்கிலத்தில் STRESS என்கிற வார்த்தைக்கு, ’மன அழுத்தம்’ என்று பொருள். மன அழுத்தமில்லாத வாழ்வொன்று தான் இங்கு கனவாக இருக்கிறது. ஆனால், மலர் படுக்கையாகவும், முட்புதராகவும் மாறி மாறி இருப்பது தான் அழகிய முரண்.
ஆசைகளுக்கும், அடைவதற்கும் இடையே வெற்றி இருக்கிறது. தேவைகளுக்கும், கிடைத்தவற்றுக்கும் இடையே மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால், கிடைத்தவற்றை ஏற்பதில் தான் திருப்தி இருக்கிறது.
எண்ணங்கள் வார்த்தைகளாகவும், வார்த்தைகள் செயல்களாகவும், செயல்கள் நடத்தையாகவும், நடத்தை ஒரு மனிதனின் தலைவிதியாகவும் மாறுவதால், ஒரு மனிதனின் எண்ணங்கள் எந்தளவு, ‘மன அழுத்தத்திற்கு’ காரணமாகின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறது இந்நுால்.
ஒருவர் தமக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை, சுயமாக அறிந்து கொள்ளும் வகையில் விளக்கியிருப்பது சிறப்பு. வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக அமையும்.
டாக்டர் டி.வி.அசோகன்

You may also like

Recently viewed